Naama Ramayana- Bala Kaanda- Tamil

We are glad to restart a series on the Naama Ramayana, a stotra (hymn) that captures the essence of the Srimad Ramayana in its entirety from the Bala Kaanda to the Uttara Kaanda. 

Here are the verses from the Bala Kaanda in Tamil.

பால காண்டம் - 1

ஶுத்தப்ரஹ்மபராத்பர ராம்
காலாத்மகபரமேஶ்வர ராம்
ஶேஷதல்பஸுகனித்ரித ராம்
ப்ரஹ்மாத்யமரப்ரார்தித ராம்

பொருள் - ஷுத்த பரப்ரஹ்மமாண ஸ்ரீ ராமா
முக்காலங்களையும் ஆளும் பரம்பொருள் ஸ்ரீ ராமா
பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்ட ஸ்ரீ ராமா ப்ரஹ்மாதி தேவர்களும் தொழும் ஸ்ரீ ராமா!

பால காண்டம் - 2

சண்டகிரணகுலமண்டன ராம்
ஸ்ரீமத்தஶரதனந்தன ராம்
கௌஸல்யாஸுகவர்தன ராம்
விஶ்வாமித்ரப்ரியதன ராம்

பொருள் - கதிரவன் குலமணியே ஸ்ரீ ராமா
தசரதனின் செல்ல மைந்தனே ஸ்ரீ ராமா
(தாய்) கோசலையின் இன்பம் பெருக்கிய ஸ்ரீ ராமா
கௌசிகர் கொண்ட பெரும் நிதி ஸ்ரீ ராமா!

பால காண்டம் - 3

கோரதாடகாகாதக ராம்
மாரீசாதினிபாதக ராம்
கௌஶிகமகஸம்ரக்ஷக ராம்
ஸ்ரீமதஹல்யோத்தாரக ராம்

பொருள் - தாடகையை வதம் செய்த ஸ்ரீ ராமா
மாரீசன் முதலியோரை வென்ற ஸ்ரீ ராமா
கௌசிகன் வேள்வியை காத்த ஸ்ரீ ராமா
அகலிகை துயரினை நீக்கிய ஸ்ரீ ராமா!

பால காண்டம் - 4

கௌதமமுனிஸம்பூஜித ராம்
ஸுரமுனிவரகணஸம்ஸ்துத ராம்
நாவிகதாவிதம்ருதுபத ராம்,
மிதிலாபுரஜனமோஹக ராம்
விதேஹமானஸரஞ்சக ராம்!

பொருள் - கௌதம முனிவர் பூஜித்த ஸ்ரீ ராமா
தேவரும், ரிஷிகளும் துதித்த ஸ்ரீ ராமா
படகோட்டி தொழுத பாதம்-கொண்ட ஸ்ரீ ராமா
மிதிலையர்-மனம் கவர்ந்த ஸ்ரீ ராமா
ஜனகரின் உள்ளம் குளிர்வித்த ஸ்ரீ ராமா!

பால காண்டம் - 5

த்ர்யம்பககார்முகபஞ்சக ராம்
ஸீதார்பிதவரமாலிக ராம்
க்ருதவைவாஹிககௌதுக ராம்
பார்கவதர்பவினாஶக ராம்
ஸ்ரீமதயோத்யாபாலக ராம்

பொருள் - முக்கண்ணன் வில் தன்னை முறித்த ஸ்ரீ ராமா
சீதை சூட்டிய மாலை அணிந்த ஸ்ரீ ராமா
விழாவாய் மணக்கோலம் கொண்ட ஸ்ரீ ராமா
பார்கவர் அகந்தையை போக்கிய ஸ்ரீ ராமா
அயோத்தி நகரை வழிநடத்திய ஸ்ரீ ராமா!

இந்த நாம ராமாயண ஸ்தோத்ரம் ஸ்ரீ லக்ஷ்மணாச்சார்யரால் இயற்றப்பட்டதாக சொல்கின்றனர். ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை எளிதாக நாம் எல்லாம் அறிய இந்த துதி ஒரு வழி.

நாம ராமாயண ஸ்தோத்ரம் அறிமுகம்